கேண்டில் ஸ்டிக் என்றால் என்ன? கேண்டில் ஸ்டிக் எப்படி உருவாகிறது? கேன்டஸ்க்கு உபயோகித்து எப்படி ஸ்மார்ட் ஆக டிரேடிங் செய்வது?
கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் என்பது வாங்குவோர் மற்றும் விற்போரின் மனநிலையை அறிந்து கொள்ளும் ஒரு யுக்தியாகும். இதன் மூலம் அந்த ஸ்டார்க்கின் எதிர்கால விலை இயக்கத்தை யூகிக்க முடியும் (future Price movement).
கேண்டில் ஸ்டிக் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ஜப்பானியர்கள்.
டெக்னிக்கல் அனலைசிஸ் கேண்டில்ஸ்டிக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.பங்குச்சந்தை திறக்கும் நேரத்தில் அந்த ஸ்டாக்கிங் விலை ஓபனிங் பிரைஸ் மற்றும் பங்குச் சந்தை மூடும் நேரத்தில் அந்த ஸ்டாக்கில் விலை கிலோசிங் பிரைஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த ஸ்டாக்கின் அதிகபட்ச விலை “High" எனவும் அந்த ஸ்டாக்கின் குறைந்தபட்ச விலை “Low"எனவும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த நான்கு டேட்டாக்களை வைத்து வாங்குவோர் மற்றும் விற்போரின் ஆதிக்கத்தை Analysis
செய்ய பயன்படுகிறது
பொதுவாக கேண்டில் ஸ்டிக்கை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1 BULLISH CANDLESTICK
2 BEARISH CANDLESTICK
வாருங்கள் இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்
1 BULLISH CANDLESTIC:
இதனை பாசிடிவ் கேண்டில் ஸ்டிக் எனவும் அழைக்கப்படுகிறது மேலும் இது பச்சை நிறத்தில் ஒரு மெழுகுவர்த்தியை போல் இருக்கும் .மார்க்கெட் ஓப்பனிங் ப்ரைஸ்சை விட குளோசிங் பிரைஸ் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதற்கு “Bullish candlestic"என அழைக்கப்படுகிறது. இது பங்குச் சந்தையின்
uptrend_க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
2 BEARISH CANDLESTICK:
இதனை நெகட்டிவ் கேண்டில் ஸ்டிக் எனவும் அழைக்கப்படுகிறது.மேலும் இது சிகப்பு நிறத்தில் ஒரு மெழுகை போல இருக்கும்.
மார்க்கெட் ஓப்பனிங் ப்ரைஸ்சை விட குளோசிங் பிரைஸ் குறைவாக இருக்குமேயானால் இதற்கு “Bearish candlestic" என அழைக்கப்படுகிறது.இது பங்குச்சந்தையின் Downtrend_க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
இந்த கேண்டிஸ்டுக்கானது மார்க்கெட்டிங் நிலவரத்தை ஒரு சில சைகைகள் மூலம் வெளிப்படுத்தும் அதனைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்!
ஹேமர் கேன்டில்ஸ்டிக்:
இதன் அறிகுறியாக ட்ரெண்ட் ரிவர்சல் ஆகப்போகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.பங்குச்சந்தை டவுன் ட்ரெண்டில் இருக்கும் பொழுது இந்த பேட்டன்
உருவாகிறது.மேலும் இந்த பேட்டன் பையர்கள் ஆதிக்கம் செலுத்துவதை குறிக்கிறது.
piercing candlestick;
இது ஒரு டபுள் கேண்டில் ரிவர்சல் பேட்டர்ன் ஆகும். இந்த கேண்டில் டவுன் ட்ரெண்டில் உருவாகி அப் ட்ரெண்டில் எடுத்துச் செல்லும்.
இதில் Bullish candlestick _இன் பாடி Bearish candlestic இன் பாடியை ஒரு 50 விழுக்காடு நிறைவு செய்து இருக்க வேண்டும்.அப்படி இருக்கும் பட்சத்தில் தான் ஆக்சுவல் ரிவர்சல் நடக்கும்.
மேலும் இது டெக்னிக்கல் அனலைசிஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அரிதான பேட்டன் வகையாகும்.
Morning Star candlestic
மார்னிங் ஸ்டார் கேண்டில் ஸ்டிக் என்பது இரண்டு சமமான Bullish மற்றும் Bearish பாடிகளுக்கு இடையே ஒரு சிறிய Bullish candlestick அல்லது Bearish candlestic
இருக்கும் பட்சத்தில் இதற்கு மார்னிங் ஸ்டார் கேண்டில் ஸ்டிக் என்று பெயர் பெற்றது.இது மார்க்கெட் டவுன் ட்ரெண்டிலிருந்து அப்ரண்ட்டுக்கு செல்லும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
doji candlestic
இந்த வகை பேட்டர்ன் பாடியே இல்லாத அல்லது சிறிதளவு பாடியுடன் பெரிய ஷேடோவை மட்டுமே கொண்டுள்ள ஒரு அமைப்பாகும்.இந்த வகை பேட்டர்ன் பையர் மற்றும் செல்லர்களுக்கு இடையே குழப்பம் நிலவுவதை குறிக்கிறது.இந்த குழப்பத்தின் போது ட்ரெண்ட் ரிவர்சல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment