முதலீடு என்னென்ன வழிகளில் செய்யலாம்?
முதலீடு பற்றிய பல விளக்கங்கள் இருப்பினும் என்னைப் பொறுத்தவரை முதலீடு என்பது ஒரு தனி நபரின் எதிர்கால தேவைக்காக நிகழ்காலத்தில் சேர்க்கக்கூடிய ஒரு பகுதி ஆகும்.முதலீட்டிற்கான வழிகள் பல உள்ளன.அவற்றுள் ஒரு சில வழிகளே சாலச் சிறந்தது.முதலீட்டைப் பற்றிய முழு விளக்கங்களை வாருங்கள் பார்க்கலாம்.
வங்கி சேமிப்பு கணக்கு;
ஒரு சாமானியனின் முதலீட்டின் முதல்படி வங்கி சேமிப்பு கணக்கு என்று சொல்லலாம்.ஏனென்றால் ஒவ்வொருவரின் மாத வருமானம்ஆனது சேரக்கூடிய முதல் இடம் வங்கி சேமிப்பு கணக்காகும்.வங்கி சேமிப்பு கணக்கில் தொடர்ந்து சேமித்து வரும் நிலையில் ஒரு நிலையான பெரிய பையனை ஒன்றும் அடைந்து விட முடியாது.ஏனென்றால் இதற்கான வட்டி விகிதம் மிகக்குறைவு 2.5%முதல்8%(per annum). உங்களது அவசர தேவைக்காக மட்டும் சேமிப்பு கணக்கை உபயோகப்படுத்துவது நல்லது.
நிலையான வைப்புத் தொகை:
இன்று கிராமப்புறங்களில் பரவலாக சேமிக்க கூடிய முறைகளில் FIXED DEPOSIT முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. FIXED DEPOSIT செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.இன்று பலரும் செய்யக்கூடிய தவறு எங்கு சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்களோ அங்கேயே FIXED DEPOSIT OPEN செய்து விடுகிறார்கள்.பரவலாக 3.5%முதல்9.5% வரை வட்டி விகிதம் வங்கிகள் வழங்குகின்றன.
இரண்டாவதாக “INFLATION RATE CHECK” செய்யவும்.நடைமுறையில் இம்ப்ளேஷன் ரேட்_இன் மதிப்பானது 7℅ ஆகும்.எத்தனை ஆண்டு காலம் முதலீடு செய்வது என்ற தெளிவான திட்டமிடலுடன் தொடங்குவது நல்லது.ஏனென்றால் அவசரமாக இடையிலேயே FIXED DEPOSIT CLOSE செய்யும்போது அதற்கான கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படும்.இதனை மக்கள் விரும்புவதற்கு காரணம் இதில் உள்ள risk மற்றும் நிலையான வட்டிவிகிதம் ஆகியன அடங்கும்.
GOLD;
இன்று பலரும் செய்யக்கூடிய முதலீட்டில் தங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தங்கத்தில் பல வழிகளில் முதலீடு செய்யலாம்.முதலீட்டின் அடிப்படையில் ஒரு சில வழிகளே சிறந்தது.தங்கத்தை ஆபரணங்களாக வாங்கும் பொழுது அதன் செய்கூலி மற்றும் சேதாரம் சற்று அதிகமாக இருக்கும்.கூடுதல் கட்டணமும் இருக்கும்.
GOLD COIN:
தங்கத்தை ஆபரணங்களாக வாங்குவதை விட அதே காயின்களாக வாங்குவதே சிறந்தது.மேலும் இதற்கான செய்கூலி, சேதாரம் மிகக் குறைவு.
GOLD SOVEREIGN BONDS;
தங்கத்தை பத்திரங்களாக வாங்கி முதலீடு செய்வதற்கு “GOLD SOVERIGN BONDS” என்று பெயர்.தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் பொழுது இதற்கான செய்கூலி சேதாரம் எதுவும் கிடையாது.இது ஒரு TAX-FREE முதலீட்டு திட்டமாகும்.மேலும் இதில் உள்ள ரிஸ்க் மிக மிக குறைவு.நாம் பத்திரங்களாக வாங்கும் பொழுது அதன் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.மேலும் இதற்கான வட்டி விகிதம் 2.5%(per annum)வரை கிடைக்கும்.மேலும் இந்த பத்திரத்தை வைத்து வங்கியில் கடன் கூட வாங்க முடியும்.இது RBI - மூலம் நடைபெறுவதால் மிகவும் நம்பகமானது.இந்த பத்திரம் வாங்கிய நாளிலிருந்து மெச்சூரிட்டி நாள்வரை காத்திருக்க வேண்டும்.அப்படி காத்திருக்கும் பட்சத்திலும் லாபம் சரியாக கிட்டவில்லை என்றால் ஒன்று அல்லது இரண்டு வருடம் விற்கக்கூடிய காலம் நீட்டிக்கப்படும்.
இந்த பத்திரத்தை வாங்கிய நாளிலிருந்து எட்டு வருடம் விற்காமல் இருக்க வேண்டும்.எதிர்பாரா விதமாக விற்கக் கூடிய நிலை வந்தால் குறைந்தது ஐந்து வருடத்திற்கு பிறகுதான் விற்க முடியும்.
REAL ESTATE;
கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது.மக்கள் தொகை வளர்ச்சி,தொழில் பெருக்கம்,போன்றவை முக்கிய காரணிகளாக அமைகிறது.ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதலீட்டை உத்திரவாதத்துடன் கொண்டு செல்ல முடியும்.ரியல் எஸ்டேட் என்பது ஒரு உறுதியான அல்லது அசையாத சொத்துக்களின் மீது முதலீடு செய்வதாகும்.மேலும் இது நீண்ட காலத்திற்கு நிலையான அல்லது உறுதியான வருமானத்தை தரவள்ளது.ரியல் எஸ்டேட்டுக்கு உதாரணங்களாக வீடுகள் குடியிருப்புகள் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை சொல்லலாம்.
ரியல் எஸ்டேட்டின் வகைகள்;
ரியல் எஸ்டேட்டை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.இதன் பயன்பாட்டின் அடிப்படையில் அதன் விலைகள் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப மாறுபடும்.
1. குடியிருப்பு; இந்த வகையான ரியல் எஸ்டேட் மக்களின் அடிப்படைத் தேவையான குடியிருப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.மேலும் இது குடியிருப்பு வசதி மற்றும் வசிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து,தனிநபர், தனிகுடும்பம், கூட்டுக் குடும்பம் போன்றவைகளாக பிரிக்கப்படுகிது.
example; houses,appartment,etc
2 வணிகம்; இந்த வகையான ரியல் எஸ்டேட்டுகள் வணிக நோக்கத்திற்காக முதலீடு செய்யப்படுகிறது.மேலும் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களில் இந்த வகை முதலீடுகள் பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றன.மேலும் இது வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. example; shoppingmall,Cinema theatre, hotels,,etc
3 தொழில்துறை: இந்த வகையான முதலீடு திட்டங்கள் உற்பத்தியை முதன்மையாகக் கொண்டு லாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலீடு ஆகும்.டிரான்ஸ்போர்ட் வசதி அதிகமாக உள்ள இடங்களில் இது நிறுவப்படுகிறது. examble : factory,கிடங்கு src
4 நிலம்; விவசாயம் ஆடு மேய்த்தல் போன்ற முக்கிய காரணிகளை நோக்கங்களாக கொண்டு முதலீடு செய்யப்படுகிறது.இவ்வகை நிலங்களை எதிர்காலத்தில் கட்டுமானத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. example;விவசாய நிலம், தரிசு நிலம், மேய்ச்சல் வயல்கள், போன்றவை
ரியல் எஸ்டேட்டின் நன்மைகள்;
1 நான் தூங்கும் பொழுதும் ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய யுக்தியை கொண்டது.
2 பண வீக்கத்தின் அபாயத்தை தவிர்க்கக் கூடியது.
3 எதிர்காலத்தில் லாப உத்தரவாதம் அளிக்கக் கூடியது
4 ரியல் எஸ்டேட்டில் உண்மையான விலை அதிகமாக இருந்தாலும் நாம் நியாயமான விலையில் வாங்கலாம்.
5 மற்ற முதலீடுகளை ஒப்பிடும்போது இந்த முதலீட்டிற்கு சற்று வரி குறைவாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் _இன் தீமைகள்:
1 நான் மிகப்பெரிய தீமையாக இதில் பார்ப்பது நீண்ட கால முதலீடுக்கு மட்டுமே இது உகந்தது.
2 இதில் பிராசசிங் டியூரேஷன் அதிகம்.
3 இதற்கான ஆவணங்கள் மற்றும் சட்ட இனக்கங்கள் அதிகம்.
முதலீடு என்பது ஒரு தனி நபரின் விருப்பத்திற்கு உட்பட்டது.சரியான நேரத்தில் தகுந்த முதலீட்டில் முதலீடு செய்வது லாபத்தை தரும் ..
Comments
Post a Comment