முதலீடு என்னென்ன வழிகளில் செய்யலாம்?
வங்கி சேமிப்பு கணக்கு;
ஒரு சாமானியனின் முதலீட்டின் முதல்படி வங்கி சேமிப்பு கணக்கு என்று சொல்லலாம்.ஏனென்றால் ஒவ்வொருவரின் மாத வருமானம்ஆனது சேரக்கூடிய முதல் இடம் வங்கி சேமிப்பு கணக்காகும்.வங்கி சேமிப்பு கணக்கில் தொடர்ந்து சேமித்து வரும் நிலையில் ஒரு நிலையான பெரிய பையனை ஒன்றும் அடைந்து விட முடியாது.ஏனென்றால் இதற்கான வட்டி விகிதம் மிகக்குறைவு 2.5%முதல்8%(per annum).
உங்களது அவசர தேவைக்காக மட்டும் சேமிப்பு கணக்கை உபயோகப்படுத்துவது நல்லது.
நிலையான வைப்புத் தொகை:
இன்று கிராமப்புறங்களில் பரவலாக சேமிக்க கூடிய முறைகளில் FIXED DEPOSIT முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
FIXED DEPOSIT செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.இன்று பலரும் செய்யக்கூடிய தவறு எங்கு சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்களோ அங்கேயே FIXED DEPOSIT OPEN செய்து விடுகிறார்கள்.பரவலாக 3.5%முதல்9.5% வரை வட்டி விகிதம் வங்கிகள் வழங்குகின்றன.
இரண்டாவதாக “INFLATION RATE CHECK” செய்யவும்.நடைமுறையில் இம்ப்ளேஷன் ரேட்_இன் மதிப்பானது 7℅ ஆகும்.எத்தனை ஆண்டு காலம் முதலீடு செய்வது என்ற தெளிவான திட்டமிடலுடன் தொடங்குவது நல்லது.ஏனென்றால் அவசரமாக இடையிலேயே FIXED DEPOSIT CLOSE செய்யும்போது அதற்கான கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படும்.இதனை மக்கள் விரும்புவதற்கு காரணம் இதில் உள்ள risk மற்றும் நிலையான வட்டிவிகிதம் ஆகியன அடங்கும்.
GOLD;
இன்று பலரும் செய்யக்கூடிய முதலீட்டில் தங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தங்கத்தில் பல வழிகளில் முதலீடு செய்யலாம்.முதலீட்டின் அடிப்படையில் ஒரு சில வழிகளே சிறந்தது.
தங்கத்தை ஆபரணங்களாக வாங்கும் பொழுது அதன் செய்கூலி மற்றும் சேதாரம் சற்று அதிகமாக இருக்கும்.கூடுதல் கட்டணமும் இருக்கும்.
GOLD COIN:
தங்கத்தை ஆபரணங்களாக வாங்குவதை விட அதே காயின்களாக வாங்குவதே சிறந்தது.மேலும் இதற்கான செய்கூலி, சேதாரம் மிகக் குறைவு.
GOLD SOVEREIGN BONDS;
தங்கத்தை பத்திரங்களாக வாங்கி முதலீடு செய்வதற்கு “GOLD SOVERIGN BONDS” என்று பெயர்.தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் பொழுது இதற்கான செய்கூலி சேதாரம் எதுவும் கிடையாது.இது ஒரு TAX-FREE முதலீட்டு திட்டமாகும்.மேலும் இதில் உள்ள ரிஸ்க் மிக மிக குறைவு.நாம் பத்திரங்களாக வாங்கும் பொழுது அதன் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.மேலும் இதற்கான வட்டி விகிதம் 2.5%(per annum)வரை கிடைக்கும்.மேலும் இந்த பத்திரத்தை வைத்து வங்கியில் கடன் கூட வாங்க முடியும்.இது RBI -க்கு நடைபெறுவதால் மிகவும் நம்பகமானது.
இதில் உள்ள குfறைகளாக பார்க்கும் பொழுது
இந்த பத்திரத்தை வாங்கிய நாளிலிருந்து எட்டு வருடம் விற்காமல் இருக்க வேண்டும்.எதிர்பாரா விதமாக விற்கக் கூடிய நிலை வந்தால் குறைந்தது ஐந்து வருடத்திற்கு பிறகுதான் விற்க முடியும்.மேலும் முதலீடு வகைகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
முதலீடு என்பது ஒரு தனி நபரின் விருப்பத்திற்கு உட்பட்டது.சரியான நேரத்தில் தகுந்த முதலீட்டில் முதலீடு செய்வது லாபத்தை தரும் .
நன்றி
Comments
Post a Comment