கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமா?கிரெடிட் கார்டு பற்றிய முழு விளக்கம்
கடன் அட்டை;
கிரெடிட் கார்டு என்பது ஒரு தனிநபரின் மூலம் மற்றும் வருவாயைப் பொறுத்து வங்கியால் வழங்கப்படும் ஒரு கட்டண அட்டை ஆகும்.
மேலும் இதைப் பயன்படுத்தி சில சேவைகள், பொருட்கள், மற்றும் பணம் எடுக்கவும் பயன்படுகிறது . இது உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கட்டண முறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதுவாக மூன்று வகையான கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் அதிகமாக புழக்கத்தில் உள்ளன.1 VISA
2 மாஸ்டர்கார்டு
3 rupay
இதைப் பற்றி தெரிந்து கொள்வோம் முன் VISA ,MASTERCARD,RUPAY என்று தெரிந்து கொள்வோம்.இவை அனைத்தும் PAYMENT GATEWAY NETWORK (PGN) ஆகும்.இது கிரெடிட் கார்டுகளின் சேவைகள் மற்றும் தகவல்களை சேகரிக்க கூடிய இடமாக இருக்கும்.இதில் RUPAY இந்தியாவில் மட்டும் புழக்கத்தில் உள்ள ஒரு உள்நாட்டு அட்டை ஆகும்.மேலும் RUPAY 2012 ஆம் ஆண்டு NPCI NATIONAL PAMENT CORPORATION OF INDIA ரிசர்வ் வங்கியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்தும்(NPCI) மூலம் கண்காணிக்கப்படுவதால் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மேலும் இந்தியாவின் சர்வரோடு இணைந்திருப்பதால் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அமைகிறது.மேலும் இந்த கார்டை இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த முடியும்.இதன் டிரான்சாக்ஷன் சார்ஜ் மிகவும் குறைவு(ஒரு பரிவர்த்தனைக்கு 2.50₹) பார்க்க.மேலும் இதன் டிரான்ஷாக்ஷன் சார்ஜ் அதிகம்(ஒரு பரிவர்த்தனைக்கு 3.25₹)
கிரெடிட் கார்டு வாங்கும் போது கவனிக்க வேண்டிய நான்கு முக்கியமான விஷயங்கள்;
A .எதற்காக கிரெடிட் கார்டு வாங்க வேண்டும்?
உதாரணம்:1. கடன் வரம்பை அதிகரிக்க(CREDIT SCORE)
2.EMI கட்டுவதற்கு ( சமமான மாதாந்திர தவணை)
3. shopping செய்வதற்கு.
B. கிரெடிட் கார்டின் நன்மைகள் என்னென்ன?
உதாரணம்: 1. பிரத்தியேக கூப்பன்.
2.பிரத்தியேக வெகுமதி.
3.பணப்பை.
C. என்ன வகை கிரெடிட் கார்டு வாங்கலாம்
1.விசா, மாஸ்டர்கார்டு, ரூபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிஐடிஐ.
D .என்னென்ன கட்டணம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு வாங்கவும்.
கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்துவது?
1) முடிந்த அளவு ஏடிஎம் டிரான்ஸாக்ஷனை தவிர்க்கவும்.
டெபிட் கார்டை போலவே கிரெடிட் கார்டுக்கு மாதம் ஐந்து முறை பணம் கட்டணம் இன்றி எடுக்கக்கூடிய வரம்பு உள்ளது.ஐந்து முறைக்கு மேல் எடுக்கும் பட்சத்தில் 2.5% முதல் 3% வரை
பரவலாக பிடித்தம் செய்யப்படுகிறது.மேலும் ஏடிஎம் மூலம் எடுக்கப்படும் பணத்திற்கு வெகுமதி புள்ளி கிடைக்காது.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் போடுவதை முடிந்தளவு தவிர்க்கவும்.
எனது அனுபவத்தை இதில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நான் சென்ற வாரம் எனது இருசக்கர வாகனத்திற்கு 500 ரூபாய் பெட்ரோல் அச்சு வங்கி கடன் அட்டை மூலம் செலவு செய்தேன்.இதில் எனது ஸ்டேட்மெண்டை எடுத்து பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சி
511ரூபாய் பிடித்தம்செய்யப்பட்டிருந்தது.இதில் ஐந்துரூபாய் sur_charge இது மீண்டும் திருப்பி அளிக்கப்படும்.மீதமுள்ள ஆறு ரூபாய் TRANSACTION CHARGE ஏனென்றால் அங்கு ஆக்சிஸ் பேங்க் swiping machine இல்லை.
MINIMUM DUE AMOUNT செலுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
கிரெடிட் கார்டு பில்லை செலுத்தும் பொழுது MINIMUM DUE, TOTAL AMOUNT, இவை இரண்டும் பார்க்கலாம். MINIMUM DUE AMOUNT'ஐ தொடர்ந்து கட்டி வரும் நிலையில் அந்தக் கடனை எக்காலமும் அடைக்கமுடியாது என்பதுஉண்மைநிலை.
நீங்கள் minimum due மட்டும் செலுத்தும் பட்சத்தில் மீதமுள்ள தொகைக்கு 3.5%வட்டி செலுத்த வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் அந்த மொத்த கடனை செலுத்தும்வரை நீங்கள்swipeசெய்யக்கூடிய ஒவ்வொரு ரூபாய்க்கும் 3.5% வட்டி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இதனை சரியாக வங்கி விவரிக்காது.
இறுதியாக கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமா?என்ற கேள்விக்கு என்னை பொருத்தவரை அது ஒரு தனி நபரின் விருப்பம்.கிரெடிட் கார்ட் பற்றிய முழு விவரம் தெரிந்து கொண்டு வாங்குவது சாலச்சிறந்தது.
Comments
Post a Comment