முதலீடு என்னென்ன வழிகளில் செய்யலாம்?
இன்று வளர்ந்து வரும் சூழ்நிலையில் முதலீடு பற்றி புரிதல் நம் பலருக்கும் இருப்பதில்லை. முதலீடு பற்றிய பல விளக்கங்கள் இருப்பினும் என்னைப் பொறுத்தவரை முதலீடு என்பது ஒரு தனி நபரின் எதிர்கால தேவைக்காக நிகழ்காலத்தில் சேர்க்கக்கூடிய ஒரு பகுதி ஆகும்.முதலீட்டிற்கான வழிகள் பல உள்ளன.அவற்றுள் ஒரு சில வழிகளே சாலச் சிறந்தது.முதலீட்டைப் பற்றிய முழு விளக்கங்களை வாருங்கள் பார்க்கலாம். வங்கி சேமிப்பு கணக்கு; ஒரு சாமானியனின் முதலீட்டின் முதல்படி வங்கி சேமிப்பு கணக்கு என்று சொல்லலாம்.ஏனென்றால் ஒவ்வொருவரின் மாத வருமானம்ஆனது சேரக்கூடிய முதல் இடம் வங்கி சேமிப்பு கணக்காகும்.வங்கி சேமிப்பு கணக்கில் தொடர்ந்து சேமித்து வரும் நிலையில் ஒரு நிலையான பெரிய பையனை ஒன்றும் அடைந்து விட முடியாது.ஏனென்றால் இதற்கான வட்டி விகிதம் மிகக்குறைவு 2.5%முதல்8%(per annum). உங்களது அவசர தேவைக்காக மட்டும் சேமிப்பு கணக்கை உபயோகப்படுத்துவது நல்லது. நிலையான வைப்புத் தொகை: இன்று கிராமப்புறங்களில் பரவலாக சேமிக்க கூடிய முறைகளில் FIXED DEPOSIT முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது....