ஒரு முதலீட்டாளராக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சிறந்த விஷயங்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்
ஒரு சிறந்த முதலீட்டாளராக மாறுவதற்கு பல தடைகளை கடக்க வேண்டியது இருக்கும்.முதலீட்டின் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்தும் யாரும் முதலீட்டை விரும்பவில்லை.முதலீடு ஏன் செய்ய வேண்டும்?எதற்காக செய்ய வேண்டும்?என்ற கேள்வியை நாம் பலருக்கும் எழும்பும்.இதற்கு பதில் நீங்கள் வைத்திருக்கும் பணமும் உங்களது வயதும் காலத்தின் ஓட்டத்திற்கேற்ப மதிப்பை இழந்து கொண்டு தான் இருக்கிறது.எவ்வளவு சீக்கிரம் முதலீடை தொடங்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நிதி சுதந்திரத்தை அடைந்து விடலாம்.இந்த வாழ்க்கையின் ஓட்டத்தில் நமக்கென ஒரு ஓய்வு முதலீடு மட்டுமே தர முடியும் என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.முதலீட்டை தொடங்குவதற்கு முன் உங்கள் வருமானத்தின் அடித்தளத்தை நன்கு வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வருமானமே உங்கள் முதலீட்டின் முதல் படியாகும்.மேலும் வருமானத்தை இரண்டு கூறுகளாக பிரியுங்கள்.ஒன்று மாதந்திர வருமானம்(monthly salary) இரண்டு கூடுதல் வருமானம்(additional income) செலவினங்களின் அனுமானங்களை கட்டுப்படுத்துதல்; உங்கள் வருமானத்தை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக அமைவது உங்களது ச...